மற்றொரு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பிரெஞ்சு விவாகரத்தொன்றைப் பெறுதல்

பிரான்சில்,வெளிநாட்டில் அங்கீகரிக்கப்படக்கூடிய விவாகரத்தொன்றைப் பெறுவதற்கான நடைமுறை கேள்விக்குரிய நாட்டைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு நாட்டிற்கும் வெளிநாட்டு விவாகரத்துத் தீர்ப்பொன்றை அங்கீகரிப்பதற்கு அதன் சொந்த நடைமுறை உள்ளது.

நீங்கள் பிரான்சில் விவாகரத்துப் பெற்றிருந்தால், விவாகரத்துத் தீர்ப்பை வேறொரு நாட்டிற்குப் பொருந்தக்கூடியவாறு ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் அந்த நாட்டைக் கேட்க வேண்டியிருக்கலாம்.

30/04/2022 அன்று மைத்ரே ஹன்சு யாலாஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

எது தொடர்புபடுகின்றது?

உங்கள் விவாகரத்தின் போது பிரெஞ்சு நீதிபதியின் விதிமுறைகளை அமுல்படுத்துமாறு மற்றொரு நாட்டின் அதிகாரிகளிடம் நீங்கள் கேட்க வேண்டுமென்றால், அந்த நாட்டில் உங்கள் விவாகரத்து அங்கீகரிக்கப்பட வேண்டும். இது விவாகரத்தின் “exequatur” என்று அழைக்கப்படுகிறது.

நடைமுறை

  • ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்ப்புகளின் சுதந்திர இயக்கத்தின் கொள்கை உள்ளது.

    இதன் அர்த்தம் என்னவெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகளில் பிரெஞ்சுத் தீர்ப்புகள் பொருந்தும், அதே போல் பொருந்தாமலும் இருக்கும்.

    ஐரோப்பிய சான்றிதழ் அல்லது “certificat européen” எனப்படும் ஆவணத்திற்காக உங்கள் விவாகரத்தை வழங்கிய நீதிமன்றத்திடம் உங்கள் வழக்கறிஞர் கேட்க வேண்டும்.

    உங்கள் விவாகரத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஆவணம் நிரூபிக்கும். வேறொரு நாட்டில் சில நிர்வாக நடைமுறைகளின் போது நீங்கள் அதைப் பற்றிக் கேட்கப்படலாம்.

  • வெளிநாட்டு விவாகரத்துகளை அங்கீகரிப்பதற்கான நடைமுறையைக் கண்டறிய உங்கள் நாட்டில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.

    உதாரணமாக, தகவலுக்காகப் பிரான்சில் உள்ள உங்கள் தூதரகத்தை அல்லது இணைத்தூதரகத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

  • நீங்கள் பிரான்சில் அரசியல்சார் அகதியாக இருந்தால், நீங்கள் பிறந்த நாட்டின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது.

    அதற்குப் பதிலாக, அகதிகளின் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற “association” எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • இந்த மையங்களுக்குப் பல பெயர்கள் உள்ளன: “Maison de Justice et du Droit (MJD)”, “Point d’accès au droit (PAD)”, "Relais d’accès au droit (RAD)”, “Antenne de justice (AJ)” or “France services (FS)”.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்களுக்கு அருகில் ஒரு “point-justice” நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியும்:
      • இந்த நிகழ்நிலை கோப்பகத்தில்.
      • பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 3039 மற்றும் வெளிநாடுகளில் இருந்து +33 9 70 82 31 90 இல் தொலைபேசி மூலம். அவர்கள் உங்கள் அஞ்சல் குறியீட்டைக் கேட்டு, “point-justice”உடன் உங்களைத் தொடர்புகொள்வார்கள். கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
  • Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.

    • இந்தச் சேவை இலவசமானது.
    • அவர்களின் வழக்கறிஞர்கள் குழு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் மற்றும் உங்கள் பிரிவு, விவாகரத்து மற்றும்/அல்லது பிள்ளைக் காப்புப் பொறுப்பு விடயங்களில் ஆலோசனைகளை வழங்க முடியும். இது ஒரு தகவல் சேவை மட்டுமே ஆகும்: அவர்கள் உங்களை சட்ட நடவடிக்கைகளில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, இதற்கு நீங்கள் ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொள்ள வேண்டும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரஞ்சு, ஆங்கிலம்.
    • தொடர்பு கொள்ளவும்: மின்னஞ்சல் மூலம் [email protected] அல்லது தொலைபேசி மூலம் 04 78 03 33 63 திங்கள் முதல் புதன்கிழமை வரை காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
  • ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

    • நல்ல வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.
    • வழக்கறிஞர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளன.
    • உங்களிடம் வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தால், இந்தக் கட்டணத்தைச் செலுத்த மாநில நிதி உதவிக்கு நீங்கள் தகுதி பெறலாம். இது "aide juridictionnelle" என்று அழைக்கப்படுகிறது.
    • ஒரு தொழில்முறையானவரால் அல்லது நீங்கள் நம்பும் நபரால் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் அமையவில்லை என்றால், பிரான்சில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் பட்டியலிடும் இந்த விவரப் புத்தகத்தில் நீங்கள் ஒருவரைத் தேடலாம். நீங்கள் பேசும் மொழிகள் மற்றும் சட்ட நிபுணத்துவம் மூலம் தேடலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

உங்கள் பிரெஞ்சு சிவில் நிலை ஆவணங்களில் உங்கள் வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்யப்பட்டிருத்தல்

பிரான்ஸ் அல்லாத வேறு நாட்டில் நீங்கள் விவாகரத்துச் செய்திருந்தால், உங்களிடம் பிறப்புச் சான்றிதழ்…

பிரான்சில் வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல்

நீங்கள் வெளிநாட்டில் விவாகரத்து செய்திருந்தால், உங்கள் விவாகரத்துத் தீர்ப்பை பிரான்சில்…

எந்த நாட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளல்

உங்கள் தேசியம், உங்கள் வாழ்க்கைத் துணையின் தேசியம், நீங்கள் திருமணம் செய்து கொண்ட நாடு மற்றும்…

பிரான்சில் விவாகரத்து

நீங்கள் பிரான்சில் உங்கள் சிவில் திருமணத்தை முடிக்க விரும்பினால், நீங்கள் பல வகையான விவாகரத்து…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்